நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேர் தேவர்சோலை பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் (55), தனது மனைவி மற்றும் மகனுடன் கூடலூரில் இருந்து ஈரோடு அருகே உள்ள கூடுதுறை பவானீஸ்வரர் கோவிலுக்கு தரிசனம் செய்ய தனது காரில் நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தனர்.
காரை கண்ணன் ஓட்டி வந்துள்ளார்.
அவிநாசியில் பழைய பஸ் நிலையம் அருகே சேயூர் சாலை சந்திப்பில் உள்ள சிக்னலில் கார் நின்று கொண்டிருந்தது. சிக்னல் முடிந்தும் காரை எடுக்காததால், இவருடைய காருக்கு பின்னால் இருந்த வாகன ஓட்டிகள் சிக்னல் விழுந்ததை கவனிக்காமல் இருக்கிறார், என்று நினைத்து ஹாரன் அடித்துள்ளனர்.
இதனால் பதட்டமடைந்த கண்ணன் ஆக்சிலேட்டரை சற்று அதிகமாக அழுத்தவே, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி சாலையோரம் இருந்த பூக்கடையின் முன்பகுதியில் நுழைந்து மின்கம்பம் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் சாலையோரம் நடந்து வந்த மாற்றுத்திறனாளி வாலிபரும், பூக்கடையில் அமர்ந்திருந்த வாலிபரும் மயிரிலையில் உயிர் தப்பியது, பூ கடையில் வைத்திருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இரு இளைஞர்கள் மயிரிலையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் சுவாரஸ்யமானதாக இருந்தது.