புதுக்கோட்டை மாவட்டம் டி களபம் அரசு தொடக்கப்பள்ளிக்கு புது கட்டடம் கட்டுவதற்கு கட்டட பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக ஆண்டிக்கோன்பட்டி நூலக கட்டடத்தில் தற்போது பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளி செயல்படும் நூலகம் கட்டடம் அருகே காலை உணவு சமைத்துவிட்டு மதிய உணவு தயார் செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக சமையல் எரிவாயு வெடித்து சிதறியதால் பரபரப்பு.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைத்த நிலையில் சமையல் நடந்த கட்டிடத்திற்கு அருகாமையில் இருந்த மாணவர்களையும் ஆங்காங்கே உள்ள வீடுகளில் தங்க வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு.