ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம்
ஜக்கம்பேட்டா காவல் நிலைய சி.ஐ. ஸ்ரீனிவாஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கிர்லம்பூடி எஸ்.ஐ. சதீஷ் மற்றும் போலீசார் கிர்லாம்பூடி மண்டலம் கிருஷ்ணாவரம் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடியில் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு ஒன்றரை மணியளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து ராஜமகேந்திராவரம் நோக்கி சென்ற காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். டிரைவர் சுங்கசாவடியில் நிறுத்துவது போல் நடித்து போலீசார் சூழ்ந்து கொண்டதால் காரை திடீரென முன்னோக்கிச் சென்றார். இதில் கிர்லாம்பூடி காவல் நிலைய கான்ஸ்டபிள் லோவராஜு மற்றும் ஏற்கனவே வாகனத்தின் முன் நின்று கொண்டிருந்த மற்றொரு கான்ஸ்டபிள் மீது மோதியது. இதில் காயமடைந்த லோவராஜுவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையா காரை போலீசார் தேடி வந்த நிலையில் ராஜாநகரம் அருகே கெனால் ரோட்டில் காரை விட்டுவிட்டு டிரைவர் ஓடிவிட்டார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் காரில் கஞ்சா கடத்தியதாகவும் அவர்களை போலீசார் மேற்கு கோதாவரியில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.