இந்திய கலாச்சார உடையான வேட்டி சட்டைகளை இன்றைய இளைய தலைமுறையினரும் பயன்படுத்தும் வகையில் ராம்ராஜ் நிறுவனம் பல்வேறு வகையான வேட்டி சட்டைகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் 7ம் தேதி வரை வேட்டி வாரம் ராம்ராஜ் நிறுவனம் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி வாரத்திற்கு ராம்ராஜ் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அளித்து வேட்டி விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 695 ரூபாய்க்கு மேட்சிங் வேட்டி சட்டைகளை அறிமுகம் செய்துள்ளது. 12 கண்கவர் வண்ணங்களில் சட்டைகளும் அதற்கு ஏற்ற வண்ண கறை கொண்ட வேட்டியை ராம்ராஜ் நிறுவனர் நாகராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர் இணைந்து அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜன் கடந்த 8 ஆண்டுகளாக வேட்டி வாரத்தை சிறப்பாக கொண்டாடி வருவதாகவும் தற்போது அறிமுகம் செய்துள்ள ஆடை லாப நோக்கமின்றி வழங்கப்படுவதாகவும் நெசவாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண நெசவு விலையில் ஆடைகள் வழங்கி வேட்டி அணியும் வழக்கத்தை ஊக்கப்படுத்த ராம்ராஜ் நிறுவனத்தின் முன்னெடுப்பு என தெரிவித்தார். மேலும் அனைத்து கடைகளிலும் நாளை முதல் 7 நாட்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் இளைஞர்கள் வேட்டி வாரத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.