மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும்… கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவது வழக்கம்…
குறிப்பாக இந்த இரண்டாம் சீசனை பொருத்தவரையில் கடந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து இருந்தாலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விடுமுறை கொண்டாடுவதற்காக பல்வேறு இடங்களில் இருந்து கொடைக்கானலில் நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை கொடைக்கானலில் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வைத்திருக்கக் கூடிய நிலையில் கால நிலையும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறு மாறி உள்ளது… கொடைக்கானலில் பகல் நேரங்களில் கடும் வெயிலும் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலை வருகிறது.. மேலும் கொடைக்கானலுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு பெரும் விருந்தளிக்கும் விதமாக காலை நேரங்களில் புல்வெளிகள் மீது உறை பனி நிலவி வருவது வெள்ளைக் கம்பளம் பொருத்தியது போன்று காட்சியளிக்கிறது… பிரம்மையூட்டும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் வியந்து பார்த்து வருகின்றனர்… இது மட்டுமல்லாது விண்ணை மட்டும் மரங்களை கொண்ட மலைப் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பணி மேகங்கள் படர்ந்து காணும் காட்சிகளையும், சூரிய உதயத்திலும் சூரிய மறைவதையும் பார்ப்பது மிகவும் அரிதாக காணப்படக்கூடிய நிகழ்ச்சியாகும்… பணியுடன் சேர்ந்த சூரிய வெளிச்சம் சுற்றுலா பயணிகளை வியப்படைய செய்கிறது…
மேலும் வித்தியாசமான காலநிலையையும் அதிசயமூட்டும் காட்சிகளையும் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்…
மேலும் உறை பனி காலமும் சில நாட்கள் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கொண்டாடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது போக்குவரத்து நெரிசல் மற்றும் பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும் காலநிலையை அனுபவிப்பதற்காகவே கொடைக்கானலை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்