கோவை தடாகம் பன்னிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த ஒரு மாத பெண் குட்டி யானையை, வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 5 முறைக்கு மேல் முயன்றும் வேறு யானைக் கூட்டம் குட்டியை ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் மீண்டும் மாலை 5 மணிக்கு வேறு கூட்டத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்ள உள்ளது.
ஒரு வேலை குட்டி யானையை, யானைக் கூட்டங்களுடன் சேரவில்லை என்றால், முதுமலை அல்லது டாப்சிலிப் முகாமிற்கு அழைத்து செல்வது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளது.