விழுப்புரம்
ராணிபேட்டையை சார்ந்த 20 பேர் வேனில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். வேனானது விக்கிரவாண்டி வட்டடாசியர் அலுவலகம் அருகே சென்ற போது மவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 20 பேரில் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு விக்கிரவாண்டி போலீசார் முண்டியம்பாக்கம் மருவத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியிலிருந்து அரசு பேருந்து ஒன்று சாலையை கடந்த போது பேருந்து வருவதை கண்டு வேன் ஓட்டுனர் ராஜா பிரேக் பிடித்தபோது நிலைதடுமாறு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். வேன் கவிழந்த விபத்துக்குள்ளாகும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.