கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஓசூர் சாலையில் பி செட்டி ப்பள்ளி என்ற கிராமம் அருகே மிண்டா என்ற தனியார் தொழிற்சாலை உள்ளது.
தொழிற்சாலையில் பணி முடிந்து வீடு திரும்பிய சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ (22) சந்தா (20) மாதுரி (24) அஸ்மிதா (24) கரன் சிதார் (20) ஆகிய 5 பேர் பிசெட்டிப் பள்ளி கிராமம் அருகே உள்ள தாங்கள் தங்கியுள்ள குடியிருப்புக்கு சாலையில் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்
அப்போது வேகமாக சென்ற கார் மோதி விபத்தில் ஜெயஸ்ரீ, சந்தா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மாதுரி, அஸ்மிதா, கரன்சிதார் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் என தெரியவந்தது இதை அடுத்து பின் தொடர்ந்த போலீசார் பெங்களூரில் மடக்கி பிடித்தனர், கார் ஓட்டுனரான சீனிவாஸ் 32 வயது மென்பொருள் பொறியாளர் என தெரிய வந்தது அவரை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் 500க்கும் மேற்பட தொழிலாளர்கள் கம்பெனி வளாகத்தில் முன்பாக மறியலில் ஈடுபட்டனர், உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் கம்பெனி முன்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் மறியயிலில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர் பின்னர் தொழிலாளர்கள் கம்பெனி வாயிற் முன்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்