பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளின் பேச்சுக்கு பெண்கள் கண்டனம்…..

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் உள்ள அங்காளம்மன் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, கடந்த வாரம் அக் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இருதரப்பினர் இடையே தங்களுக்கே கோவில் உரிமை என்று எழுந்த மோதலை தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவிலை திறக்க உதவிடுமாறு இரு தரப்பின் அழைப்பின் பேரில் , சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாமக வை சேர்ந்த அருள் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒரு தரப்பில் ஆண்களும் மற்றொரு தரப்பில் பெண்கள் மட்டுமே பேசினர். பேச்சுவார்த்தையில் , கோவில் அமைந்துள்ள பகுதி அரசு நிலத்தில் இருப்பதால், அனைவருக்குமான கோவிலாக மாற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் சூழல் உள்ளது. அதனால், இரு தரப்பும் ஒற்றுமையாக கோவிலை திறந்து விழா நடத்துங்கள் என்று கூறியதை ஏற்க பெண்கள் ஏற்க மறத்ததால் , ஆவேசமடைந்த எம்எல்ஏ அருள், பெண்களைப் பார்த்து உங்கள் வீட்டில் ஆம்பள எவனுமே இல்லையா, எல்லாம் பொட்டையா என பேசினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இதைக் கேட்ட அந்த பெண்கள் எம்எல்ஏ- விடம் கையெடுத்து கும்பிட்டு இப்படி பேசதீங்க என்று கூறியதோடு அழுது புலம்பினர். மேலும் ஆத்திரமடைந்த சில பெண்கள் அருளிடம் கேள்வி எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பிரச்சனை ஏற்படும் எனக் கருதிய அருள் எம்.எல்.ஏ , சமாளித்துக்
கொண்டு , நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள் என கூறிவிட்டு நழுவி சென்றுவிட்டார். அதனால், பேச்சுவார்த்தை முடிவின்றி முடிந்தது. இந்நிலையில் பாமக எம்.எல்.ஏ அருள் , பெண்களிடம் , இங்கு ஆம்பளைங்களே இல்லையா? என பேசிய விவாகரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.