வரி உயர்வை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கையில் மண்சட்டியுடன், நாமமிட்டு வெளிநடப்பு. திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர்களும் கோஷமிட்டபடியே வெளிநடப்பு.‌ திருமுருகன் பூண்டி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறியதால் கூட்டம் ஒத்திவைப்பு.

  திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சியில், நகராட்சி தலைவர் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற நகர்மன்ற  கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் திமுக கவுன்சிலர்கள் எட்டு பேர் தங்களது வார்டுகளை நகராட்சி நிர்வாகம் தலைவர் மற்றும் ஆணையர் புறக்கணிப்பதாக கூறி  வெளிநடப்பு செய்தனர்.திமுக  தலைவரை கண்டித்து திமுகவினர்‌ வெளிநடப்பு செய்த நிலையில் அடுத்தாக

அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேரும் கையில் மண்சட்டியுடன், நெற்றியில் நாமம் இட்டும், கருப்பு உடை அணிந்து, தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள சொத்து வரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டண வரி உயர்வு, அபராத வரி உள்ளிட்டவைகளையும் உடனடியாக ரத்து செய்யக் கோரியும்
நகர்மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் முழங்கியபடியே அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

  இதே போல ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர்மன்ற உறுப்பினர்கள், மக்களை வாட்டி வதைக்கும் இந்த வரியேற்றம் மற்றும் அபராத வரி உள்ளிட்டவைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கண்டன கோஷம் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர் இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து திருமுருகன் பூண்டி நகர் மன்ற கூட்டம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

ருகன் பூண்டி நகர் மன்ற கூட்டம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.