திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை அருகே உள்ள லட்சுமி நகர் என்ற பகுதியில் ரங்கா சிக்கன் கடை என்ற பெயரில் பிரியாணி கடையும்நடத்தி வந்த சிலம்பரசன் என்பவர் அருகே உள்ள அவரது இல்லத்திலேயே வீட்டினுள் மனைவியை கறி வெட்டும் அரிவாளால் வெட்டி, கழுத்தை அறுத்து கொன்ற விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் உடலை பல்லடம் போலீசார் மீட்டு தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் தர்மபுரி அருகே பெண்ணாகரம் பகுதியை சேர்ந்த இவர்கள் இப்பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்ததாகவும் கடந்த ஒரு வாரமாகவே கணவன் மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதம் சண்டை நடந்ததாகவும் இந்நிலையில் இரவில் இது போன்ற சம்பவம் அரங்கேறியது அதற்கான காரணம் என்ன என்று பற்றி தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இவர்களுக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் சிறுவனும் உள்ளனர் ,இந்நிலையில் நேற்று சிறுவன் அருகே உள்ள உறவினர் இல்லத்தில் இரவு உறங்கியதாகவும் இந்நிலையில் பெண் பிள்ளை மட்டும் வீட்டில் இருந்து அக்குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்த போது இச் சம்பவம் நடந்துள்ளதாகவும் தற்போது தகவல் தெரிய வருகிறது