⛽ எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரங்கள் விடுமுறை.
சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில் பாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும்; 50% பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
#Pakistan #FuelCrisis #SchoolHoliday #ShehbazSharif #WorldNews #EnergyCrisis 🌍
