🚆வந்தே பாரத் ரயிலில் வழங்கும் உணவு குறித்து புதிய சர்ச்சை.

Indian Railways இயக்கும் வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் உணவு தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

ரயிலில் பரிமாறப்படும் சூடான ரொட்டி மற்றும் கச்சோரி போன்ற உணவுகள் பிளாஸ்டிக் கவர்களில் சீல் செய்யப்பட்ட நிலையில் வழங்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த ரயில்வே ஊழியர்கள், அந்த பிளாஸ்டிக் கவர்களை அப்படியே மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்தி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

அதிக வெப்பத்தில் பிளாஸ்டிக் உறைகளை சூடுபடுத்துவது நச்சுத்தன்மை ஏற்படுத்தி, பயணிகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

#VandeBharat #RailwayNews #FoodSafety #PassengerSafety #IndiaNews