பெரம்பலூர் அருகே கோவில் நிலம் விவகாரம் — கிராம மக்கள் திடீர் சாலை மறியல் 🚧.

குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள பழமையான பஞ்சமி நிதீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலம், பொதுமக்களுக்கு தெரியாமல் அறநிலைத்துறை மூலம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் பெரம்பலூர்–துறையூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

🚨 இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

#Perambalur #Kurumbalur #RoadBlock #TempleLandIssue #TamilNaduNews #BreakingNews 🚨