🙏 சிவாலய ஓட்டம் – கை குழந்தையுடன் 108 கி.மீ நடந்த தம்பதியர்.
கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் நடைபெற்று வரும் சிவாலய ஓட்டத்தில், குழந்தை இல்லாமல் 6 ஆண்டுகள் தவித்த தம்பதியரின் வேண்டுதல் நிறைவேறிய நிலையில், பிறந்த 5 மாத கை குழந்தையுடன் 108 கி.மீ தூரம் நடந்து 12 சிவாலயங்களை தரிசித்து வரும் நிகழ்வு பக்தர்களை உருக வைத்துள்ளது.
குட்டகுழி பகுதியை சேர்ந்த சுரேஷ்–அபிஷா தம்பதிகள், முதல் சிவாலயமான முஞ்சிறை அருள்மிகு மகாதேவர் கோவில் இருந்து பயணத்தை தொடங்கி, குழந்தை பிறந்ததற்கான நன்றியாக இந்த புனித யாத்திரையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
