🥋 நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி – மாணவர்கள் அசத்தல்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி இன்று நடைபெற்றது.
குமரி மாவட்ட சிலம்பாட்ட சங்கம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து போட்டியை நடத்தினர்.
🏫 மாவட்டம் முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஒற்றை சிலம்பம், அடிமுறை சிலம்பம், தனித்திறன் சிலம்பம் உள்ளிட்ட பிரிவுகளில் 14, 17, 19 வயது பிரிவினர்கள் போட்டியிட்டனர்.
👏 மாணவர்களின் சாகச திறன்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினர்.
#Nagercoil#Kanyakumari#Silambam#Students#SportsEvent#TamilNadu
