📚 ஆண்டு இறுதி தேர்வில் வெற்றிக்காக ஹயக்ரீவர் ஹோமம் – திருவட்டாரில் சிறப்பு யாகம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றிய ஹிந்து கோயில் கூட்டமைப்பு சார்பில், ஆண்டு இறுதி தேர்வில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெற வேண்டி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்றது.
குலசேகரம் எஸ்.ஆர்.கே.வி தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த யாகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பல மூலிகை பொருட்களுடன் நடைபெற்ற யாகத்தில், ஹிந்து கோயில் கூட்டமைப்பு டிரஸ்ட் செயலாளரும் ஆர்.எஸ்.எஸ் தமிழக பொறுப்பாளருமான ஐயப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஹயக்ரீவர் வழிபாட்டின் பயன்கள் குறித்து உரையாற்றினார்.
#HayagreevaHomam#மாணவர்_நலன்#திருவட்டார்#கன்னியாகுமரி#ஆண்டு_இறுதி_தேர்வு#HinduTemple#EducationBlessings
