🚨 போலீஸ் முன்னாடியே கெத்தா? – 10 வயது சிறுவன் ஓட்டிய பைக்; சினிமா பாணியில் மடக்கிய போலீஸ் 👮♂️🏍️
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரை அதிரவைத்த சம்பவம் நடந்தது. 👀
10 வயது மதிக்கத்தக்க சிறுவன், தனது தந்தையை பின்னால் அமர வைத்துக் கொண்டு TVS XL இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் ஓட்டிச் சென்றார்.
இதனை கவனித்த சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் ராஜா உடனடியாக வாகனத்தை மடக்கிப் பிடித்து, சிறுவனிடமிருந்து சாவியை பறிமுதல் செய்தார்.
🎬 செய்தி வாசிப்பாளர் பாணியில் கண்டனம் தெரிவித்த அவர், தந்தை–மகனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார்.
🚔 காவல் நிலையத்தில், 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களே முழுப் பொறுப்பு என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மீண்டும் விதிமீறல் நடந்தால் வழக்குப்பதிவு, சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தி இருவரையும் அனுப்பி வைத்தனர்.
📱 இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#RoadSafety
#TrafficRules
#JuvenileDriving
#PoliceAction
#Chengalpattu
#Guduvancheri
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
