🚨 டிஜிட்டல் இந்தியா… டிஜிட்டல் லஞ்சம்?
🎓 இன்சூரன்ஸ் காலாவதி எனக் கூறி கல்லூரி மாணவர்களிடம் GPay மூலம் ரூ.500 வசூல் செய்ததாக
சிங்கப்பெருமாள் கோவில் அருகே போக்குவரத்து காவல்துறையினர் மீது கடும் புகார் எழுந்துள்ளது.
📍 பொத்தேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்,
இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர்களை மறித்து, அபராதம் விதிக்காமல்
பாக்கியராஜ் என்ற போலீஸ் உடையில் இல்லாத தனிநபரின் மொபைல் எண்ணிற்கு
GPay மூலம் பணம் செலுத்துமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
💸 இது ஒருமுறை அல்ல; தினசரி நடைபெறும் வசூல் எனவும்,
வசூலான பணம் அந்த நபரின் கணக்கில் சென்று பின்னர்
போலீசார் பங்கிட்டு கொள்வதாகவும் குற்றச்சாட்டு.
📱 GPay ஆதாரங்கள் உள்ள நிலையில்,
சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் இடைத்தரகர் மீது
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#DigitalBribe #PoliceCorruption #GPayScam #TrafficPolice #Chengalpattu #SingaperumalKoil #StudentHarassment #TamilNaduNews
