கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (28.01.2026) திருச்சியில் நடைபெற்ற மறைந்த கழக முன்னோடி திரு. பாலகிருஷ்ணன் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பரணிகுமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் பகுதியில் வளர்வதற்கும், இருவண்ணக் கொடி பறப்பதற்கும் பாலகிருஷ்ணன் அவர்கள் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார் என நினைவுகூர்ந்தார்.
அவர் இன்று உடலால் இல்லை என்றாலும், அவரது பணிகளை மகன் பரணிகுமார் தொடர்ந்து முன்னெடுத்து இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
#MKStalin
#DMK
#Trichy
#PartyEvent
#MarriageFunction
#TamilNaduCM
#PoliticalNews
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
