📰 திண்டுக்கலில் ரேசன் அரிசி கடத்தல் | ஒருவர் கைது.
திண்டுக்கல் டவுன் டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான தெற்கு காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் பேகம்பூர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் இருந்து சுமார் ஒரு டன் ரேசன் அரிசி, கேஸ் சிலிண்டர் மற்றும் பம்ப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது சௌக்கான் சேட் (23) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடைய இருவர் குறித்து போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
#Dindigul
#PoliceAction
#RationRiceSeizure
#Smuggling
#CrimeNews
#TamilNaduPolice
#Begampur
