📰 “அம்மா படத்தை அகற்ற முடியாது” – அரசியலிலிருந்து விலகும் முடிவை அறிவித்த ஆர்.டி. ராமச்சந்திரன்.

“அம்மா படத்தை அகற்றுவாயா? என்று அம்மா கேட்டதும், எனது வளர்ப்புத் தாயான ஜெயலலிதாவின் படத்தை என் அலுவலகத்திலிருந்து எடுக்க என்னால் முடியாது.

அதனால் திமுகவில் இணையும் முடிவை கைவிடுகிறேன்” என, ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் குன்னம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், “அரசியல் பொது வாழ்க்கையிலிருந்தும் விலகுகிறேன்” என்றும் அவர் அறிவித்தார்.

வரும் 26ஆம் தேதி திமுகவில் இணையப்போவதாக முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், இந்த கண்ணீர் பேட்டி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilPolitics #Jayalalithaa #OPS #DMK #PoliticalExit #EmotionalStatement #TNPolitics #RT Ramachandran #BreakingNews