📰 காஞ்சிபுரம் அருகே 5 டன் செங்கரும்பால் பிரம்மாண்ட தேர் – பொங்கல் விழாவில் பொதுமக்கள் வியப்பு.
🌾 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குண்டுக்குளம் கிராமத்தில் 5 டன் எடையிலான செங்கரும்புகளால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய கோவில் தேர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
📏 21 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட இந்த பிரம்மாண்ட தேர், சக்கரங்கள் உட்பட முழுவதும் செங்கரும்பால் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
👨🌾 விவசாயி செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், விவசாயிகளின் உற்பத்தியை போற்றும் வகையிலும், செங்கரும்பை அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
🏡 கடந்த ஒரு வாரமாக தயாரிக்கப்பட்ட இந்த செங்கரும்பு தேர், பொங்கல் தினத்தன்று கிராமிய முறையில் காட்சிப்படுத்தப்பட்டு,
👀 இன்றிலிருந்து 10 நாட்கள் பொதுமக்கள் நேரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📌 பார்ப்பவர்களை ஒரு நிமிடம் மெய் மறக்கச் செய்யும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செங்கரும்பு தேர், பகுதி முழுவதும் பாராட்டைப் பெற்று வருகிறது.
#Kanchipuram #Gundukulam #PongalFestival #SugarcaneChariot #FarmersPride #TamilTradition #HarvestFestival #AgriAwareness #NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
