🏛️ காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திகுன்றம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ 1008 த்ரைலோக்கியநாதர் மற்றும் ஸ்ரீ 1008 சந்திரபிரபநாதர் பகவான் ஜினாலயம் வளாகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை பொங்கல் விழா மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது.
👩🎨 இதில் 75-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, ⏱️ ஒரு மணி நேரத்தில் கோயில் உள்பிரகாரத்தைச் சுற்றி 🎨 வண்ணக் கோலமாவில் அழகாகவும் நேர்த்தியாகவும் பல்வேறு கோலங்களை வரைந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
🏆 நடுவர்கள் மதிப்பீட்டின் அடிப்படையில், 🥇 முதல் பரிசாக 32 இன்ச் LED டிவி, 🥈 இரண்டாம் பரிசாக கிரைண்டர், 🥉 மூன்றாம் பரிசாக மிக்ஸி வழங்கப்பட்டது. 🎁 மேலும் பங்கேற்ற அனைவருக்கும் ரூ.500 மதிப்புள்ள பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.
🤝 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கே.இ. நந்தி மித்ரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜி. பாபு சிறப்பாக செய்திருந்தனர். 🎁 பரிசுகளை யுவர் சத்யா ஸ்டோர்ஸ் வழங்க, அதன் டெப்டி ஜெனரல் மேனேஜர் ராஜா மற்றும் மேலாளர் விஜய் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
#PongalFestival#KolamCompetition#Kanchipuram#Thirupparuthikundram#JainTemple#WomenEmpowerment#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
