தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ஜோதி நகர், கருணாநிதி நகர், வக்கீல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

🚓 ரோந்து பணியின் போது, வக்கீல் தெருவில் உள்ள திருமண மண்டபம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 2 வாலிபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் வைத்திருந்த பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

👮‍♂️ விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி எம்.எஸ்.எஸ்.வி. நகரைச் சேர்ந்த மணிமாறன் (26) மற்றும் ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்ற ஜான் (19) என்பதும் தெரியவந்தது. ஜான் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர் எனவும், மதுரையிலிருந்து கஞ்சா வாங்கி கோவில்பட்டியில் விற்பனை செய்ததும் போலீசார் தெரிவித்தனர்.

⚖️ இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

#Kovilpatti
#DrugSeizure
#PoliceAction
#CrimeNews
#DrugFreeTamilNadu
#TuticorinDistrict