காஞ்சிபுரம் மாநகரில் நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குஜராதி திருமண மண்டபத்தில், திமுக பிரமுகர் எம்.எஸ். சுகுமார் ஏற்பாட்டில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
இரவு நேரங்களிலும் தொடர்ந்து நெசவுத் தொழிலில் ஈடுபடுவதால் கண் நோயால் பாதிக்கப்படும் நெசவாளர்களுக்கு உதவும் வகையில் இந்த முகாம் அமைக்கப்பட்டது. இதில் அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து வந்த சிறப்பு மருத்துவர்கள் நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை அளித்தனர். மேலும் மருந்துகள் மற்றும் மூக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த முகாமில் ஏராளமான நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
