🏥 திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 50-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய (ஒப்பந்த) செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை கைது செய்ததை கண்டித்தும், திமுக அரசு 536வது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

👩‍⚕️ செவிலியர் கண்காணிப்பாளர் நிலை–3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், 🤰 எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

#Tiruppur
#NursesProtest
#ContractNurses
#GovernmentHospital
#HealthcareStaff
#TamilnaduNews

#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia