பெரம்பலூர் – ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் சுவாமிகளின் 37ஆம் ஆண்டு குருபூஜை விழா
📍 பெரம்பலூர் | 🕉️ ஆன்மிக விழா
பெரம்பலூர் டவுன் புதிய பேருந்து நிலையம் வடபுறம் உள்ள ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் ஆசிரமத்தில் 37ஆம் ஆண்டு குருபூஜை இன்று அதிகாலை ஆன்மிக ரீதியாக நடைபெற்றது.
🕓 அதிகாலை 4.30 மணி முதல் அகவல் பாராயணம், சிவனடியார்களின் சிவ பூதக்கண வாத்திய இசையுடன் அலங்காரம், கொல்லிமலை மற்றும் சதுரகிரி மலைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மூலிகைகளால் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, 108 சித்தர்களின் யாகசாலை பூஜைகளும் சிறப்பாக நடந்தது.
🍛 மதியம் 12 மணி முதல் அன்னதானமும், அதே நேரத்தில் சாதுக்களுக்கு வஸ்திரதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அன்னதான குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தலையாட்டி சித்தரின் அருளைப் பெற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆசிரம நிர்வாகிகள் வே.காமராஜ், வே.நந்தேஸ்வரன், வே.சக்திஸ்வரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
#Perambalur#ThalaiyattiSiddhar#GuruPooja#SpiritualEvent#Annadhanam#TamilNews
