தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி யில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை.
நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு.
நாமக்கல் அடுத்த பொம்மை குட்டை மேட்டில் பெட்ரோல் பங்க் எதிரே கடந்த 2021 ஆம் ஆண்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக கார்த்திக் (20) ஸ்ரீதரன் (22) அருண் குமார் (26) பிரகாஷ் (38) ஆகிய 4 பேரை கைது செய்து நாமக்கல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.குற்றம் சுமத்தப்பட்ட 4 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து இன்று தீர்ப்பு அளித்தார்.இதனையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
