கோடை காலம் முடியும் வரை வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட செயற்கை தண்ணீர் தொட்டிகளை தூய்மைப்படுத்தி பராமரிக்க முடிவு
தூய்மைப்படுத்திய தண்ணீர் தொட்டியில் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்த யானை கூட்டம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை காரமடை பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளது தற்பொழுது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது வனப்பகுதியில் இயற்கையாக உள்ள கசிவு நீர் குட்டைகள் நீர் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது இந்த நிலையில் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்கு செயற்கை தண்ணீர் தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது இந்த தண்ணீர் தொட்டிகளில் பாசி படர்ந்து காணப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டிகளை கோடை காலம் முடியும் வரை கண்காணித்து சுத்தப்படுத்தி தண்ணீர் வழங்குவதற்கு வனத்துறையினர் முடிவு செய்து தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து வருகிறார்கள் அப்படி மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வனத்துறை மரக்கடங்கில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை சுத்தப்படுத்தி நீர் நிறைத்து வைத்திருந்தனர் அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் அருந்தி செல்கிறது