இராமநாதபுரத்தில் நூற்றாண்டு பழமையான தர்காவின் முன்பிருந்த கொடிக்கம்பத்தை நகராட்சி அகற்றியதை கண்டித்து இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் சாலை மறியல்:ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமையான தர்காவின் முன்பிருந்த கொடிக்கம்பத்தை நகராட்சி அகற்றியதை கண்டித்து இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிரே அமைந்துள்ள ஹஜ்ரத் செய்யத் நூர்ஷா காதிரி ஒலியுல்லா தர்ஹா. நூற்றாண்டு பழமையான இந்த தர்ஹா சேதுபதி மன்னர் காலத்தில் இருந்து இயங்கி வருகிறது.

இந்த தர்ஹாவின் முன்பாக பல அடி உயரமுள்ள கொடிக்கம்பம் இருந்து வந்துள்ள நிலையில் தமிழகத்தில் கொடி கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ராமநாதபுரம் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நகராட்சி அலுவலர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் கொடி கம்பத்தை அகற்றினர்.

இதனை கண்டித்து தர்ஹா பகுதியிலுள்ள ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உட்பட பலர் கேணிக்கரை அரண்மனைச் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது…

சாலை ஓரம் பல நூறு ஆண்டுகளாக இருந்த கொடி கம்பம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஏன் கொடிக்கம்பத்தை அகற்றினீர்கள், முன்பாக தெரிவித்தால் நாங்களே கொடிக்கம்பத்தை நாங்களே அகற்றி இருப்போம் என கூறி மீண்டும் எங்களுக்கு கொடிக்கம்பம் அமைத்து தர வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநாதபுரம் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தகவல் தெரிவிக்காமல் அகற்றியது தவறு, இன்று மாலைக்குள் கொடி கம்பம் அமைத்து தரப்படும் என தெரிவித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டப்பட்டது.
இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.