கோவிலுக்குள் புகுந்த மழை நீரில் செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்.

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இரண்டாம் நாளாக நடந்து வருகிறது.
இன்று மாலை ஒரு மணி நேரம் திடீரென பெய்த கனமழை காரணமாக சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது..
சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயணர் சுவாமி சன்னதி,கோமதி அம்பாள் சன்னதி, வெளிப்புறகாரம்,கொடிமரம்.உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது..

மழை நீரை வெளியேற்றுவதில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில் மழை நீரை வெளியேற்றுவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.. பின்பு பக்தர்கள் மழை நீரில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.