நாங்குநேரி அருகே பறிமுதல் செய்யப்பட்ட 806 கிலோ கஞ்சா பொட்டலங்கள் தீயில் இட்டு அழிப்பு.
மதுரை மாநகர காவல் நிலையங்களுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்களை அழிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
மதுரை மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட மதுரை 25 காவல் நிலைய பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு பின்பு கைப்பற்றப்பட்ட 806கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் இன்று அழித்தனர்.
முன்னதாக நாங்குநேரி அருகே உள்ள பொத்தையடி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அங்கு வந்த மதுரை சிட்டி காவல் ஆணையாளர் லோகநாதன் துணை கண்காணிப்பாளர் அனிதா நாங்குநேரி ஏ.எஸ்.பி.பிரசன்ன குமார் மற்றும் மதுரை தடைய அறிவியல் துறை இயக்குனர் வித்யா ராணி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கஞ்சா பொட்டலங்களின் எடை அளவு சரிபார்க்கப்பட்டு தீயில் இடப்பட்டது.
இதனை ஒட்டி கஞ்சா அளிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.