கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மாலை நேரத்தில் எவ்வித அச்சமும் இல்லாமல் சாலையில் உலா வந்த காட்டு யானை வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஓட்டம் பிடித்தனர்…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பாதையில் அமைந்துள்ள குஞ்சப்பனை பகுதியில் காட்டு யானை கூட்டங்கள் முகாமிட்டுள்ளது.அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானை மாலை நேரத்தில் எவ்வித அச்சமும் இல்லாமல் மலைப்பாதையில் உலா வந்துள்ளது.இதனால் பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மலைப்பாதையில் காட்டு யானை முகாமிட்டதால் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்களும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சென்ற வாகனங்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன .
தற்போது இந்த காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் மலைப்பாதையில் சுற்றி திரியும் ஒற்றைக் காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்தவனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .