வார விடுமுறை நாட்களை தொடர்ந்து கொடைக்கானலை நோக்கி படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்.. வார நாட்களில் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் இன்று கொடைக்கானல் பல்வேறு பகுதிகளில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாகும்.. கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்ச சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.. குறிப்பாக கோடை விடுமுறை நாட்களில் மலைவாசஸ்தலங்களுக்கு படையெடுக்கக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு முதலிடத்தை பிடிப்பது கொடைக்கானல் , ஊட்டி போன்ற மலை நகரங்கள் தான் …
இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் விதிமுறைகள் விதிக்கப்பட்டு வார நாட்களில் 4000 வாகனங்களுக்கும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் ஏப்ரல் மாதத்தில் இருந்தே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அதிகரித்து காணப்படக்கூடிய நிலையில்…
இந்த ஆண்டு வார நாட்களில் சுற்றுலா தலங்கள் அனைத்துமே வெறிச்சோடி காணப்பட்டது…
மேலும் இன்று சனி மற்றும் ஞாயிறு விடுமுறை யை கொண்டாடுவதற்காக கொடைக்கானலை நோக்கி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர்…
இதனால் முகப்பு பகுதியில் உள்ள செண்பகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வாகனம் அணிவகுத்து நிற்கின்றன…
மேலும் வார இறுதி நாட்களில் மட்டுமே கூட்டம் காணப்படுவதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்களுக்கு வார இறுதி நாட்களில் மட்டுமே வியாபாரம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது …
மேலும் வார நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்படுவதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளோர் கவலை அடைந்துள்ளார்.