கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி ; கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்ற மருத்துவக்கல்லூரி மாணவர்கள்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள், இடைநிலை மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இடையே மன அழுத்தத்தை குறைத்து உடல்நல பராமரிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 41 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியின் நிறைவாக உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பவானி கொடியசைத்து துவக்கி வைத்து தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மாணவர்கள், இளநிலை மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து சமூகத்தில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்,உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து ரோடு மாமந்தூர் வரை கோஷங்களை எழுப்பியவாறும் கையில் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் விழிப்புணர்வு பேரணியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நடன நிகழ்ச்சியையும் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.