ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி -2000மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்து சாமி தரிசனம் குழந்தை வரம் வேண்டி பெண்கள் பனை மரத்தைச் சுற்றி தொட்டில் கட்டி சாமி தரிசனம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு அக்னி வசந்த விழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.


இதில் 15 நாட்களாக மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நாடக கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் அணிந்து கொண்டு 40அடி பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு கதை சொல்லி பின்னர் பாடல்களைப் பாடிக் கொண்டு பனை மரத்தின் மீது ஏறி மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர்.

இந்த சிறப்புமிக்க அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியை காண வந்தவாசி சுற்றியுள்ள கடைசி குளம், வழூர், விழுதுப்பட்டு, நடுப்பட்டு, ஆரியாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.மேலும் பெண்கள் குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் தபசு மரத்தைச் சுற்றி வலம் வந்து தொட்டில் கட்டி சாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் தபசு மரத்தின் மீது ஏறி நடித்த அர்ஜுனன் எலுமிச்சம் பழம் வீசும் போது கீழே இருந்த ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடி ஏந்தி பக்தி பரவசத்துடன் பழத்தைப் பிடித்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.