கோவை வெள்ளியங்கிரி கோயிலுக்கு வரும் ஒற்றை காட்டு யானை – பக்தர்கள் பாதுகாப்புக்காக கும்கி யானை வரவழைப்பு.

கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்கு கடந்த பிப்.1 தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானை கோயில் வளாகத்தில் உலா வருகிறது.
இந்நிலையில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் டாப்சிலிப் யானை முகாமில் இருந்து நரசிம்மன் என்ற கும்கி யானையை வரவழைத்துள்ளனர்.
காட்டு யானை வந்தால் அதனை தடுக்கவும், வனப்பகுதிக்குள் விரட்டவும் கும்கி பயன்படுத்தப்பட உள்ளது.