திருப்பூர்: மத்திய பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு மற்றும் உள் வாடகை கடைகளை கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மதியம் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீப்புணர் அமைக்கப்பட்டு 84 கடைகள் உடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதில் உள்ள கடைகள் அனைத்தும் ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் குத்தகை எடுத்த கடை உரிமையாளர்கள் பயணிகளின் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து இருப்பதாகவும் உள்வாடகைக்கு கடைகளை விட்டிருப்பதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி உதவியாளர் வினோத் தலைமையிலான அதிகாரிகள் மத்திய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது கடைகளுக்கு முன்பாக அதிக அளவில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர் மேலும் உள் வாடகைக்கு வைக்கப்பட்டிருந்த பூக்கடை உள்ளிட்ட கடைகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.