வளர்பிறை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் அதிகமான திருமணங்கள் நடந்ததால் அலைமோதிய கூட்டம்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும்(30.04.2025 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவிழா நாட்கள் மற்றும் முகூர்த்த தினங்களில் அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்றைய தினம் வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.
காலை 5 மணி முதல் 7 மணி வரை அதிகமான திருமணங்கள் கோவில் முன்புள்ள சண்முக விலாசம் மண்டபத்தில் திருமணங்கள் நடந்து வருகிறது.
சண்முக விலாச மண்டபத்திற்குள் மணமக்களின் தாய் தந்தை மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மணமக்களுக்கு பெரியோர்கள் தாலி எடுத்துக் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணி மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டிய வைபவம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது பாரம்பரியமான குலவை விட்டு திருமணங்கள் நடைபெற்றது.
கோவிலை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மணமகன் மணமகள் உறவினர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இங்கு சண்முக விலாச மண்டபம் கோவில் முன்புள்ள கோவில் வளாகம் உட்பட பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.