இராமநாதபுரம் அருகே 15 வயது சிறுமியை கடத்திச் சென்று ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த திருப்புல்லாணி வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவு

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தாய் தந்தையை இழந்த 15 வயது சிறுமி பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த நிலையில் அந்த சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த சேதுராஜன் என்பவர் சிறுமியிடம் பேசி ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கு இராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .
வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி செல்வி கவிதா குற்றவாளி சேது ராஜனுக்கு இரு வேறு பிரிவுகளின் கீழ் 25 வருடம் கடுங்காவல் தண்டனையும் மற்றும் 7000 ரூபாய் அபராதம் வைத்து தீர்ப்பளித்தார்.