
நின்றிருந்த லாரியில் ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீஸ் விசாரணை.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் பெருந்துறையில் இருந்து கெமிக்கல் ஏற்றி வந்த லாரி மரக்காணம் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
இன்று காலை நிறுத்தப்பட்ட லாரி நீண்ட நேரம் ஒரே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால் லாரிக்குள் பார்த்த அப்பகுதி மக்கள் ஓட்டுநர் மர்மமான முறையில் இநந்து உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இறந்தவர் ஆற்காடு கீழ்குப்பம் கிராமத்தை ரமேஷ் 42 என்பது தெரியவந்துள்ளது.