ஜெயங்கொண்டம் தா.பழூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நகல் எரிப்பு போராட்டம் நகலை பிடுங்க முயற்சித்த போலீசாருக்கும் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதத்தால் பரபரப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் இந்திய மாதர் தேசிய செம்மேளனம் சார்பில் பெண்களுக்கு எதிராக அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நகல் எரிப்பு போராட்டம் மாநில செயலாளார் கண்ணகி தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் முருகேஸ்வரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட குழு அபிமன்னன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பெண்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பு நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது தா.பழூர் போலீசார் நகலை பிடுங்கி தடுத்து நிறுத்தியதில் இருவருக்கும் இடையே வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.