அங்கன்வாடி பணியாளர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வட்டார மேற்பார்வையாளர்கள் வலியுறுத்துவதாக புகார் கூறி ஆண்டிப்பட்டியில் அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி வட்டார மேற்பார்வையாளர்களாக செயல்படும் முருகேஸ்வரி மற்றும் சுமதி ஆகியோர் அங்கன்வாடி பணியாளர்களை பாலியலில் ஈடுபட வலியுறுத்தியும், அங்கன்வாடி பணியாளர்களிடம் மாதந்தோறும் கட்டாய வசூல் செய்வதையும், லஞ்சம் தராத பணியாளர்களை விரோத போக்கால் பழி வாங்கும் நடவடிக்கை மேற்கொள்வதை கண்டித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வட்டார மேற்பார்வையாளர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களிடம் விரோதப் போக்கை கடைபிடிக்கும் வட்டார மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில அளவிலான போராட்டத்தை நடத்துவோம் எனவும் அறிவித்துள்ளனர்