போலி தங்க கட்டி கொடுத்து பியூட்டி பார்லர் பெண் உரிமையாளரை ஏமாற்ற முயன்ற அக்கா தம்பி கைது

திருவள்ளுர் அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதியில் பியூட்டி பார்லர் உரிமையாளரான
சரண்யா என்பவரிடம் போலி தங்க கட்டி காட்டி 10 லட்சம் மோசடி செய்ய முயன்ற ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த அக்கா தம்பியான
லட்சுமி – 29 ரவிக்குமார்-23 இருவரை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்,