முசிறி அருகே கத்திகுத்து சம்பவத்தில் ஆறு பேர் கைது -.
தலைமுறைவாக உள்ள மேலும் ஒரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே அலகரை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி கிராமத்தில் கடந்த 25-ந்தேதி இரவு 7 பேர் கொண்ட கும்பல் மது போதையில் வீண் தகராறு செய்து கல்லுப்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் (50), குமார் (42), வாலிபர் சந்துரு (19) ஆகிய மூன்று பேரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் விவசாயி சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விவசாயி குமார், சந்துரு ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்கள் நேற்று திருச்சி – நாமக்கல் சாலையில் முசிறி அருகே மணமேடு கிராமத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கூறியும்,
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய தொட்டியம் தாலுகா, திருஈங்கோய்மலை அருகே உள்ள திருமலையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (43), இவரது உறவினர் பெருகமணி அருகே உள்ள பலையூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் கரண் (22), திருஈங்கோய்மலை கூலி தொழிலாளி வேல்முருகன் (22), பெருகமணி பலையூர் பகுதியை சேர்ந்த இன்பரசு (19), தோளூர்பட்டி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த நவீன் (19), தொட்டியம் பகுதியை சேர்ந்த சசி (எ) சசிகுமார் (42) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த கத்தி குத்து சம்பவத்தில் இதுவரை
மொத்தம் 6 பேர் செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய சத்யா (40) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.