கர்நாடகா மாநிலத்தில் கழிவுநீர் மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கும் ரசாயன கழிவுநீர், மழை காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதால் நீரில் நுரைப்பொங்கி காணப்படும்
ஆனால் தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர் கணிசமாக மட்டுமே அணைக்கு வந்துக்கொண்டிருக்கிறது.

இன்று காலை அணைக்கு விநாடிக்கு 231 கனஅடிநீர் வரத்தாகவும் அவை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் வலது, இடது புற கால்வாய்களில் பல அடி உயரத்திற்கு நுரைப்பொங்கி காட்சியளிக்கிறது தென்பெண்ணை ஆற்றில் செல்லும் நீரில் அதிகப்படியான நுரைப்பொங்கி துர்நாற்றத்துடன் நுரை செல்கின்றன.குவியல் குவியலாக துர்நாற்றத்துடன் நுரை வெளியாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் கடந்த ஆண்டுகளில் தமிழக – கர்நாடக இருமாநிலங்களை சேர்ந்த பசுமை தீர்ப்பாயத்தினர் இந்த நீரின் மாதிரிகளை சேகரித்து சென்றபோதும் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது