மலை இரயில் தண்டவாளத்தில் பின்னி பிணைந்த பாம்புகள் சுற்றுலாப் பயணிகள் கண்டு வியப்பு
மலை இரயில் 15 நிமிடங்கள் காலதாமதமாக குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் கிளம்பியது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பர். பாம்பை கண்டால் பயம் ஒருபுறம் இருந்தாலும்,இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்தாலே அது அழகுதான்! அதிலும் அவை நடனமாடி தொடங்கிவிட்டால். அழகோ அழகுதான் இந்த நிலையில் குன்னூர் இரயில் நிலையத்தில் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மலை இரயிலில் பயணம் செய்ய ஆர்வமுடன் இரயிலில் காத்திருந்தனர். அப்போது இரண்டு சாரைப்பாம்புகள் மலை இரயில் தண்டவாளத்தில் பின்னி பிணைந்து நடனமாடியது. இதனை கவணித்த மலை இரயில் ஓட்டுநர்கள் மலை இரயிலை 15 நிமிடம் நிறுத்தி நடனம் முடிந்தவுடன் மலை இரயிலை இயக்கி சென்றனர்.