கன்னியாகுமரி
குமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியை சேர்ந்த இரும்பு மனிதன் என அழைக்கப்படும் கண்ணன் என்பவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைத்து சுமார் 90 கிலோ முதல் 140 கிலோ வரையிலான பதினோறு இளவட்ட கல்லை ஒன்றின் பின் ஒன்றாக பத்தே நிமிடத்தில் தூக்கி ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட ஐந்து இளவட்ட கல் தூக்கிய சாதனையைமுறியடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சாதனை நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள்.