கருத்தரங்கிற்கு கள் கொண்டு வந்தது சட்டவிரோதம்.

https://youtu.be/DIHLcbR2X7I

போலீசார் க்கும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி க்கு இடையே கடும் வாக்குவாதம்….

நாமக்கல் நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் காவிரி மற்றும் கள் உரிமை மீட்புக் கருத்தரங்கம் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.நல்லசாமி தலைமையில் இன்று (26-4-2025) நடைபெற்றது.
கள் இறக்குவதற்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். கள் உணவின் ஒரு பகுதி என கடந்த பல ஆண்டுகளாக நல்லசாமி தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்று நடைபெற்ற கருத்தரங்கிற்கு கள்ளை அவர் எடுத்து வந்திருந்தார்.
தகவலறிந்த நாமக்கல் போலீசார் கருத்தரங்கம் நடந்த இடத்திற்கு வந்தனர்.
தமிழக அரசால் கள் தடை செய்யப்பட்டுள்ளது. கள் கொண்டு வந்தது சட்ட விரோதம் என கூறினர். போலீசார் க்கும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி க்கு இடையே நடைபெற்ற கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கருத்தரங்கிற்கு வந்தவர்களுக்கு கள் பரிமாறப்பட்டது . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.